Tip:
Highlight text to annotate it
X
போகுது பார், ரயில் போகுது பார்.
புகையினைக் கக்கியே போகுது பார்.
'குபு குபு ' சத்தம் போடுதுபார்.
'கூக் கூக்' என்றுமே கூவுதுபார்.
தூரமும், நேரமும் குறைவதுபார்.
துரிதமாய் எங்குமே ஓடுதுபார்.
அறையறை யான வண்டிகள்பார்.
அவற்றிலே மனிதர் செல்வதுபார்.
'ஸ்டேஷ' னி லெல்லாம் நிற்குதுபார்
சிகப்புக் கொடிக்கே அஞ்சுதுபார்.
மலையைக் குடைந்தே செல்லுதுபார்.
மையிருள் தன்னிலும் ஓடுதுபார்.
பாலம் கடந்தே போகுதுபார்.
'பட, பட கட, கட ' என்குதுபார்.
பட்டன மாமா கடிதமெல்லாம்
பையிலே தூக்கி வருகுதுபார்.
காசை கரியாய் ஆக்காமல்
கரியைப் புகையாய் விடுவதுபார்.
போகுது பார், ரயில் போகுது பார்.
புகையினைக் கக்கியே போகுது பார்.
'குபு குபு ' சத்தம் போடுதுபார்.
'கூக் கூக்' என்றுமே கூவுதுபார்.
தூரமும், நேரமும் குறைவதுபார்.
துரிதமாய் எங்குமே ஓடுதுபார்.
அறையறை யான வண்டிகள்பார்.
அவற்றிலே மனிதர் செல்வதுபார்.
'ஸ்டேஷ' னி லெல்லாம் நிற்குதுபார்
சிகப்புக் கொடிக்கே அஞ்சுதுபார்.
மலையைக் குடைந்தே செல்லுதுபார்.
மையிருள் தன்னிலும் ஓடுதுபார்.
பாலம் கடந்தே போகுதுபார்.
'பட, பட கட, கட ' என்குதுபார்.
பட்டன மாமா கடிதமெல்லாம்
பையிலே தூக்கி வருகுதுபார்.
காசை கரியாய் ஆக்காமல்
கரியைப் புகையாய் விடுவதுபார்.